மணிலா:
பிலிப்பைன்ஸில் ஜோலோ என்ற ஊரில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
தெற்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 விமானம் இன்று விபத்துக்குள்ளானது, இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த 40 பேர் மீட்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் தெற்கு ககாயன் டி ஓரோ நகரத்திலிருந்து ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.