சென்னை: பிஜிஆர் நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.
தமிழகஅரசு, பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இதுகுறித்து மாநில பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. தகுதியே இல்லாத பிஜிஆர் நிறுவனத்திற்கு ரூபாய் 4,400 கோடி காண்ட்ராக்ட்டை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது என்றும், இனி அடிக்கடி தமிழ்நாட்டில் மின்வெட்டு வரலாம். மக்கள் வீடுகளில் யூபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் எனதெரிவித்தார்.
இதற்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை 11.30 மணி அளவில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகஅரசு பிஜிஆர் நிறுவனத்திற்குமுறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது தமிழகஅரசு! இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…