நம்முடையக் கவலைகளை மறந்து செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது பலரது வாடிக்கை.
அப்படி நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை பற்றித் தெரிந்துக் கொள்ளும் புத்தம் புதியப் பகுதி இது.
செல்லப் பிராணி என்றாலே எல்லோர் நினைவிற்கும் எளிதாய்த் தோன்றுவது “நாய்” தான்.
எனவே நாயில் இருந்தே இந்தப் பகுதியைத் தொடங்குவோம்.
தங்கமீட்பான் (கோல்டன் ரெட்ரீவர்)
அமெரிக்காவில் புகழ்பெற்ற வளர்ப்பு பிராணி வகையிது.
இதன் பொறுமைக் குணம் இதனை குடும்பத்தின் பிரியமான விலங்காகவும் , இதன் அறிவுக்கூர்மை இதனை வேலைக்கு உகந்த பிராணியாகவும் ஆக்குகின்றது.
இவை வேட்டைக்கு, போதைவஸ்த்துக்கள் மோப்பம் பிடிக்க, துணை வேலைக்கும் பயன்படுத்த உகந்தவை.
நாம்வேட்டையாடும் போது, ந்மதுஅம்பு அல்லது துப்பாகியால் வேட்டையாடப்படும் கொக்கு, பறவை போன்றவற்றை ஓடிச் சென்று நம்மிடம் சேத்துவிடுவதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.
அவை இயற்கையில், நல்ல தடகள வீரர் என்பதால் நாய்ப் பந்தயங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவை.
சுறுசுறுப்பு மற்றும் கீழ்ப்படிதல் இதன் சிறப்பம்சம்.