டெல்லி:
நாடு முழுவதும் 5வது நாளை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெல்லியில் இன்று லிட்டருக்கு ரூ.60 பைசா உயர்ந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினசரி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செயது விற்பனை செய்து வருகின்றன.
ஆனால், கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக, இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தியதால், கச்சா எண்ணை விலை வெகுவாக குறைந்தது. இதனால், இந்தியாவிலும், கடந்த மார்ச் 16ம் தேதி முதல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது.
ஆனால், தற்போது ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள் ளநிலையில், 83 நாட்களுக்குப் பிறகு கடந்த 7ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுள்ளது.
தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை நேற்று ரூ .73.40 ஆக இருந்த நிலையில், இன்று லிட்டருக்கு 60பைசா உயர்த்தி ரூ .74 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல டீசல் விலை நேற்று லிட்டர் ரூ .71.62 ஆக இருந்த நிலையில், இன்று ரூ .72.22 ஆக உயர்த்தப்பட்டடுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து 77.91 ரூபாய் எனவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 70.64 என்னவோ விற்பனையாகிறது. ஐந்து நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 2.75 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது
ஏப்ரலில் ஒரு பேரல் 20 டாலருக்கும் கீழ் சென்றபோது, இதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், சர்வதேச சந்தையைில் கச்சா எண்ணெய் விலை பேரல் 40 டாலரை தாண்டியதை காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இப்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் விலையை உயர்த்தி வருவது ஊரடங்கு சமயத்தில் வருமானம் இன்றி தவித்து வரும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.