டெல்லி:

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது  என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்காமல் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய  மாநில அரசுகள் தங்களது இஸ்டம்போல கூட்டி வருகின்றனர்.  இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது. தற்போதைய விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, விலையை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.