புதுச்சேரி

ரும் ஜனவரி 1 முதல் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுகிறது.

பெட்ரோல், டீசலுக்கு புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல், டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின் (வாட்) கீழ் திருத்தப்பட்ட வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26 சதவீதத்திலிருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக காரைக்காலில் 8.65 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.91 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வருகிறது.

வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவட்ஜா; புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.26, காரைக்காலில் 96.03, மாஹேவில் 93.92, ஏனாமில் 96.92 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும்  புதுச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ. 86.48, காரைக்காலில் ரூ.84. 31, மாஹேவில் ரூ. 81.90, ஏனாமில் ரூ. 84. 75 உயர்த்தப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசவ் விலை உயர்வினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.