சென்னை
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த விலைக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அரசு அறிவித்த போதிலும் தேர்தல் நேரங்களில் விலை உயர்வு அறிவிக்கப்படுவதில்லை.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியான பிறகு மிண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டன. இடையில் சில நாட்கள் விலை உயராமல் ஒரே நிலையில் இருந்தது. இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.94.71க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைப் போல் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.88.62க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைப் போல் டில்லியில் பெட்ரோல் விலை ரூ.93.04 மற்றும் டீசல் விலை ரூ.83.80 ஆகி உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.99.32 மற்றும் டீசல் விலை ரூ.91.01 ஆகி உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.93.11க்கும் டீசல் ரூ.86.64க்கும் விற்கப்படுகிறது.