ண்டிகர்

ன்று பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளடு.

காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் ஆட்சி செய்தபோது மின் கட்டணத்தில் ரூ.3 மானியமாக வழங்கப்பட்டது.  இந்த மின் கட்டண மானியத்தை தற்போதைய ஆம் ஆத்மி அரசு ரத்து செய்துள்ளது.

அரசு மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவு என்பதால் மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதைப் போல் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 61 பைசாவும், டீசலுக்கு 92 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ப்ண்ஞாஈள் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97.01 ஆகவும், டீசலின் விலைரூ.87.21 ஆகவும் உள்ளது.

பஞ்சாப் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருவதால் வருவாயை பெருக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது