ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்..

மாதிரி புகைப்படம்

உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா.

அந்த நாட்டில் இருந்து ஆன் –லைன் மூலமாக ஒடிசா மாநிலம் கோரபுத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சின்மயா கோயா என்பவர் ஒரு ஜோடி ‘ஷு’ க்களுக்கு ஆர்டர் செய்தார்.

தபாலில் அவருக்கு ஷு அனுப்பப்பட்டது.

தபால் நிலையம் சென்று ஷுவை  பெற்ற கோயா, வீட்டுக்கு வந்து, அதனைக் காலில் அணிந்து அழகு பார்த்துக்கொண்டிருந்த போது-

அவர் வீட்டுக்கதவைத் தட்டியது, போலீஸ்.

தபால் இலாகாவினர், சின்மயாவுக்கு சீனாவில் இருந்து ஷு வந்திருக்கும் தகவலைப் போலீசில் தெரிவித்திருந்தனர்

‘ஷு’ வை பறிமுதல் செய்த போலீசார், ’’14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும்’’ என்று சின்மயாவை எச்சரித்துச் சென்றுள்ளனர்.

ஷுவிலும்,ஷுவை தொட்ட சின்மயாவுக்கும் வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

’ஷுவை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி விட்டு, பின்னர் வந்த சுவடு தெரியாமல் அதனை அழிக்கத் திட்டம்.

– ஏழுமலை வெங்கடேசன்