செகந்திராபாத்

செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள துர்கை சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிலையை உடைத்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின்  விசாரணையில் அவர் சல்மான் சலிம் தாக்கூர் என்பதும், அவர் மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது  இவர் இந்து கோவில்களில் உள்ள சிலைகளை சேதப்படுத்துவது இது முதல் முறையல்ல என்பதும் இதற்கு முன்பும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஐதராபாத் காவல்துறை வெ:ளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஜாகிர் நாயக் போன்ற சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும் தாக்கூர். காலப்போக்கில் வன்முறையாளராக மாறியிருக்கிறார். இதுபோன்ற வீடியோக்கள், அவரது மனதில் தீவிரவாத கருத்துக்களை விதைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்து மத வழிபாட்டு நடைமுறைகளுக்கு மையமான சிலை வழிபாட்டின் மீது அவர் ஆழமான வெறுப்பை வளர்க்க வழிவகுத்துள்ளது.

ஆளுமை மேம்பாட்டு பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இந்த மாத தொடக்கத்தில் ஐதராபாத் வந்திருந்தார் தாக்கூர். செகந்திராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த பயிலரங்கம் நடைபெற்றது. அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வளாகத்தை பயிலரங்கம் நடத்துவதற்கு சட்ட விரோதமாக வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. இதையடுதது, பயிலரங்கை நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”

என்று தெரிவித்துள்ளது.