சென்னை:
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்வு, இந்த ஆண்டு சுமுகமாக நடைபெறுவதற்காக வேண்டுகோள் விடுத்தோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel