சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க மேலும் 147 ஏக்கர் நிலம் கையப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், புதிய விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமானது, சென்னையில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்கு 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் அது 6ஆயிரம் ஏக்கராக மாற்றப்பட்டது.
நிலம் குறித்த பாத்தியத்தை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.