மதுரை: மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு திமுக அரசு முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள திடலில் வருகிற (ஜுன்) 22-ஆம் தேதி பிரமாண்டமான முறையில், முருக பக்தா்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் மத்தியஅமைச்சர்கள், உ.பி. முதல்வர் யோகி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து பல முக்கிய நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டைய மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் அறுபடை வீடு முருகன் கோவில் மாதிரிகள் அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யவும் மாநாட்டு நிர்வாகிகள் முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மதுரை காவல்துறையில் அனுமதி கோரப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து, பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி உள்ளது.
. இதையடுத்து, முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை வைத்து 10 நாள்கள் பூஜை நடத்தவும் அனுமதி கோரி, மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயா்நீதின்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, விழாவுக்கான அனுமதி தொடா்பாக காவல் துறை சாா்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழாக் குழுவினா் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ஆம் தேதி ஒத்திவைத்தாா் நீதிபதி.
இதன்படி, இந்த மனு நேற்று ( வெள்ளிக்கிழமை) மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத நிகழ்ச்சியில் கண்டிப்பாக அரசியல் கலக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், மாநாட்டில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்தவும் அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.
முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு செய்ய அனுமதி! உயர்நீதி மன்றம்…