டெல்லி

திகார் சிறை நிர்வாகம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார்.

மேலும்  அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து வருகின்றனர்.  அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. திகார் சிறை துறை அதிகாரிகளிடம் இருந்து இது குறித்து எவ்வித மறுப்பு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

“மோடி அரசின் அறிவுறுத்தலின் பேரில், திகார் சிறை நிர்வாகம் சுனிதா கெஜ்ரிவாலின் கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பை ரத்து செய்தது. மோடி அரசு, மனிதாபிமானமற்ற அனைத்து வரம்புகளையும் தாண்டி வருகிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒரு பயங்கரவாதியாக நடத்தப்படுகிறார். சுனிதா கெஜ்ரிவாலை அவரது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்காதது ஏன் என்று நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும்.” 

என்று குற்றம் சாட்டியுள்ளது.