டில்லி

தார் விவரங்கள் வெளியானதாக வந்துள்ள புகாரை அடுத்து 5000 அதிகாரிகளுக்கு விவரங்களைக் காணும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆதார் விவரங்கள் ரூ. 500 விலையில் பார்க்க முடியும் என ஒரு பத்திரிகை புகார் அளித்தது.   அதை ஒட்டி ஆதார் நிறுவனம் அந்த பத்திரிகை மீதும் பத்திரிகையாளர் மீதும் வழக்கு தொடர்ந்தது.   அதே நேரத்தில் பொதுமக்கள் இடையே இந்த விவரங்கள் வெளியாவது குறித்து பலத்த சந்தேகம் எழுந்தது.    இந்த சந்தேகம் மக்களிடையே மட்டுமின்றி ஆதார் நிறுவனத்துக்கும் இருந்து வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக ஆதார் நிறுவனம் அரசு அலுவலகங்களில் இருந்து 4000 தனியார் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதியை அளித்துள்ளது.    அத்துடன் மேலும் 26000 நிலையங்கள் அமைக்கப் பட உள்ளன.    அத்துடன் தொலைதொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண்ணை பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களை உபயோகப் படுத்தி வருகின்றனர்.

எனவே இந்த இடங்களில் இருந்தும் ஆதார் விவரங்கள் வெளி வர வாய்புள்ளது.   தற்போது முக்கியமான இடங்களில் உள்ள 5000 அதிகாரிகளுக்கு ஆதார் விவரங்களை அறிந்துக்கொள்ளும் அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.    இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.