சண்டிகர்
ஒலிம்பிக் போட்டியை காண பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரிஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்திய ஆக்கி அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுக்கு பின் வீழ்த்தி சாதனை படைத்தது. இன்று இங்கிலாந்துடன் இந்திய ஆக்கி அணி மோத உள்ள இந்த காலிறுதிப் போட்டி, \ நடைபெறுகிறது.
இந்தப் போட்டியை நேரில் காண்பதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் செல்லவிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பாரீஸ் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர்பகவந்த்மான் இது குறித்து,
“இந்திய ஒலிம்பிக் அணியில், பஞ்சாப் வீரர்கள் மட்டும் 19 பேர் உள்ளனர். ஆக்கி அணியில் இருக்கும் வீரர்களில் 10 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இந்திய அணி, வலு மிகுந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆக்கியில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தான், இந்திய அணி காலிறுதியில் விளையாடுவதை நேரில் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பம் தரப்பட்டது.
அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதே போல 2022-ல் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்ட போதும் மத்திய அரசு மறுத்து விட்டது. ஒவ்வொரு பிரச்னைக்கும் நாங்கள் கோர்ட்டுக்கு செல்லட்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா..?
என்று வினா எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாநில சபாநாயகரான குல்தர் சிங் சந்த்வான், அரசு பயணமாக இன்று அமெரிக்கா செல்லவிருந்தார். மத்திய அரசு அவருக்கும் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்துள்ளது,