டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மாநில அரசின் தீர்மானத்தின்மீது நடவடிக்கை எடுத்து அவரை விடுதலை செய்வதாகவும், அவரை விடுதலை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தின்மீது கவர்னர் முடிவு எடுக்காததையும் கடுமையாக விமர்சித்து உள்ளது. பேரறிவாளன் விடுதலை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் பேரறிவாளன் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குற்றம் சாட்டியுள்ளார்.