திருச்சி:

பெரம்பலூரில் அ.தி.மு.க நிர்வாகி மீதான பாலியல் தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வழக்கறிஞர், பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர் பெயரை தெரிவிக்க மறுத்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த பாலியம் சம்பவம் தொடர்பாக சில பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலும் பொள்ளாச்சி போன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதிமுகவினர் சிலர்  இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக தகவல் பரவியது. இதுதொடர்பாக   நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் புகார்  அளித்திருந்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அப்போது, பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டது யார் என்பது குறித்து வெளிப்படையாக கூற மறுத்துவிட்டடார்.

வக்கீல் அருள் கொடுத்த புகார் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி உள்ளதாகவும், எனவே அருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல் அணியினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். இதற்கிடையில் வழக்கறிஞர் அருள்மீது அதிமுக மகளிர்அணியினர் புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பாலியம் சம்பவம் தொடர்பாக  காவல்துறையினர் சில பெண்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.