சென்னை: பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதையடுத்து, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டசபை ஊரியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்பணியில் இருக்கும் காவலர்கள் உள்பட  அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நெகடிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே சபைக்குள் அனுமதிக்கப்படு வார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.