டொடோமா, தான்சானியா
தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில் 480 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.167 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா சோதனைக்காக தான்சானியா வெளிநாடுகளில் இருந்து கருவிகள் இறக்குமதி செய்துள்ளது.
இந்த கருவிகள் மீது தான்சானியா அதிபர் சந்தேகம் கொண்டுள்ளார். அதையொட்டி அவர் இந்த பரிசோதனைக் கருவிகல்ழின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் பரிசோதனை நிலையத்துக்கு ஆடு மற்றும் பப்பாளிப் பழத்தில் இருந்து எடுத்த மாதிரிகளை மனிதர்களின் பெயரில் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி உள்ளனர்.
அந்த பரிசோதனையில் பப்பாளிப் பழம் மற்றும் ஆடுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ள்து. இது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தான்சானியா அதிபர் இறக்குமதி செய்யப்பட்ட பரிசோதனைக் கருவிகள் தொழில்நுட்ப ரீதியாகத் தவறாக உள்ளதால் அவற்றுக்குத் தடை விதித்துள்ளார். இந்த கருவிகள் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அதிபர் உத்தரவு இட்டுள்ளார்.