ரவில் நாம் தூங்கும்போது இரண்டுமுறைக்கு மேல் எழுந்து சிறுநீர் கழிக்கும்போது நம்முடைய தூக்கம் குறைகிறது. தூக்கம் குறைவதால் வேலைநேரத்தில் நம்முடைய செயல்திறன் குறை கிறது, நம்முடைய செயல்திறன் குறைவதால் நாம் முடிக்க வேண்டிய பணிகள் கால தாமத மாகிறது. இந்த கால தாமதத்தால் நிறுவனத்திற்கும் ஏற்பாடு இழப்பு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் எதிரொளிக்கிறது என்று ரான்ட் யூரோப் ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரவில் இரண்டு முறைக்கு மேல் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு நாக்டுரியா (Nocturia) என்று பெயர், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது நம்முடைய சிறுநீரக பிளாடரின் கொள்ளவுக்கு மேல் செல்லும்போது இயற்கையாகவே நம்முடைய தூக்கம் கலைந்து பாத்ரூமுக்கு செல்ல நேரிடும். இப்போது நம்முடைய தூக்கம் பாதிக்கப்படுவதால் தூக்கம் இல்லாமல் நாம் அடுத்த நாள் வேலைக்கு போகலாமா ? வேண்டாமா என்ற எண்ணத்துடன் இருப்பதும்,  வேலைக்கு போனாலும் அரை குறையாக வேலை செய்வதும் அவர் செய்யும் பணியின் சராசரி நேரத்தினை விட அதிகமாகிறது.

நாக்டுரியா (Nocturia) பாதிப்பில் உள்ளவரை விட  நாக்டுரியா பாதிப்பு இல்லாதவர் ஒரு வருடத்தில் 7 நாட்கள் அதிகமாக வேை செய்கிறார் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக வேலை செய்யும் பணியாளர்களில் 12.5%  ( 2.75 கோடி பேர்) நாக்டுரியா (Nocturia) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுகள் மேற்கொள்ள இதர நாடுகளான   யுகே, ஜெர்மனி , ஸ்பெயின், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போனற நாடுகளில் 5.36 கோடி பேரு பாதிக்கப்பட்டுள்ளனர்., இந்த 5 நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பணியாளர்களில் 13% முதல் 17% வரை இந்த நாக்டுரியா வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் ஜப்பானுக்கு 13.7 மில்லியன் டாலரும், ஜெர்மனி 8.4 மில்லியன் டாலரும், யுகே 5.9 மில்லியன் டாலரும், ஸ்பென் மற்றும் ஆஸ்திரேலியா 3 மில்லியன் டாலரை இழந்துள்ளன . இந்தியாவில் இந்த ஆய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நாக்டுரியா (Nocturia)  பிரச்னை உள்ளவர்களுக்கு வாழ்க்கையிலும், பணியிலும் குறைந்த பட்ச திருப்தியே கிடைத்திருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வாழும் இடம், வாழ்க்கை முறை, உடல் நலம் போன்ற பாலின விகிதம், வயது விகிதம் என பன காரணிகள் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும்  நாக்டுரியா (Nocturia)  பிரச்னை உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய், இதய நோய்கள் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவவை வரவும் காரணியாகிவிடும்.

எனவே ஆரோக்கியமான சூழ்நிலையில் உங்கள் நேரத்தினை உங்கள் குடும்பத்தினருடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் செலவிடுங்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

செல்வமுரளி