2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் ரஜினிகாந்த் இல்லை. அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இதனால் எந்தளவுக்கு ஏமாற்றம் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

சரி, நடந்தது நடந்துவிட்டது! அதற்காக அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? அல்லது காணாமல் போய்விட முடியுமா?

வெளிப்படையாக தன்னை தீவிர வலதுசாரியாக காட்டிக்கொண்ட ரஜினிகாந்த் இல்லையென்றால் என்ன? முற்போக்காளர் வேடத்தில் அரசியல் களத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி கமலஹாசன் இருக்கிறாரே! எனவே, அவரை வைத்து சொரிந்து கொள்வோம் என்ற மன ஆறுதலுக்கு வந்துவிட்டனர் பலர்.

இதன் விளைவுதான், “கமல் பெரியளவில் வாக்குகளை வாங்குவார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவரின் தலைமையில் பல கட்சிகள் இணையும். கமல் பிரிக்கப்போகும் வாக்குகள் திமுக அணிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். இந்த 2021 தேர்தலில் அவர் ஏற்படுத்தப்போகும் தாக்கம் மாபெரியது” என்றெல்லாம் பேசி மற்றும் எழுதி புளங்காகிதம் அடைந்து கொள்கிறார்கள்.

என்னதான் இருந்தாலும், கருத்து சுதந்திரம் கொண்ட ஜனநாயக நாட்டில், இது அவர்களுக்கான உரி‍மையல்லவா..!