தராபாத், பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளரான டேனியல் பேர்ல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மிகவும் கொடூரமாகத் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.    இந்த கொலை வழக்கில் தீவிரவாதி உமர்சையது ஷேக் உள்ளிட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.   இதை எதிர்த்து அவர்கள் மேல் முறையிட்டு செய்தனர்.

 

டேனியல் பேர்ல்

சுமார் 18 ஆண்டுகள் இந்த வழக்கு ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அந்த தீர்ப்பில் உமர்ஷேக் உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என்பதற்கு ஆதாரம் கிடையாது எனக் காரணம் கூறி விடுதலை செய்துள்ளது.

உமர்சையது ஷேக் மீது கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது.  அதில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மேல் முறையீடு நடந்த 18 ஆண்டுகளாக உமர்சையது ஷேக் சிறையில் இருந்ததால் அவர் விரைவில்  விடுதலை செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

இதனால் கொடூரமாகக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட உமர்சையது ஷேக் சுதந்திரமாக நடமாடுவார் என உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் முன்பு மரணதண்டனை பெற்ற போது அமெரிக்காவின் அழுத்தத்தால் தமக்குத் தண்டனை அளிக்கப்பட்டதாகவும் இது இஸ்லாமியர்களுக்கும் காஃபிர்களுக்கும் இடையிலான மோதல் எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.