பாட்னா:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அராரியாவில் நடந்த கருத்துகணிப்பு பிரச்சாரத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை, மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று தெரிவித்துள்ளார்.

அராரியாவில் நடந்த கருத்துக் கணிப்பு பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை பற்றி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பீகார் இளைஞர்கள் மிகவும் கோபமாக இருக்கின்றனர் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமாக இருந்தாலும், மோடி வாக்கு பதிவு இயந்திரமாக இருந்தாலும் பீகார் மக்கள் பெரும் கூட்டணிக்கே வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிஹார் மக்களுடன் எங்களுக்கு வாழ்நாள் உறவு இருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடி சமூகத்தில் வெறுப்பை பரப்பியுள்ளார், வெறுப்பை வெறுப்பின் மூலம் தோற்கடிக்க முடியாது ஆனால் அன்பால் முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் போராட்டம், கருப்பு பணத்திற்கு எதிரானது என்றால்… பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, அவர் ஏன் எங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களை வங்கி முன் நீண்ட வரிசையில் காக்க வைத்தார், அவர்கள் கருப்பு பணம் வைத்திருக்கிறார்களா??? என்று ஆச்சரியமாக கேட்டடுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் துவங்கிய போது நமது பிரதமர் ஒரு முறை கூட யோசிக்காமல் முழு அடைப்பை அறிவித்தார், நம் நாட்டில் பல கோடி மக்கள் தினசரி கூலித் தொழிலாளிகள் என்று பிரதமருக்கு தெரியாதா??? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

பிகாரில் எங்கள் பெரும் கூட்டணி ஆட்சி அமைத்தால், அது அனைத்து சாதி, மதம் மற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கான அரசாங்கமாக இருக்கும் என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.