ஜகார்த்தா
இந்தோனேசியா நாட்டில் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் பல எரிமலைகள் உள்ளன. இதில் சுமத்ரா தீவில் உள்ள எரிமளையும் சுலவேசி தீவில் உள்ள எரிமலையும் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே வெடிக்கும் நிலையில் உள்ளன. இந்த எரிமலைகள் அவ்வப்போது நெருப்பு குழம்புகளை வெளிப்படுத்தி வந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாகவே இந்நாட்டு மக்கள் எரிமலை குறித்த ஒரு அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. அந்த எரிமலையில் இருந்து வெளிவரும் புகை சுமார் 6500 அடி உயரத்துக்கு பரவி உள்ளது. இந்த புகை மக்கள் மனதில் பீதியை கிளப்பி உள்ளது. இந்தோனேசிய அரசு எரிமலை அருகில் பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளது. சாம்பல் ஏராளமாக பறந்து வரும் என்பதால் மக்கள் முகமூடி அணிந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு தரப்பில் இருந்து அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்களை காலி செய்ய சொல்லி எவ்வித உத்தரவும் அளிக்கப்படவில்லை. எனினிம் மக்கள் தாங்களாகவே வெளியேறொ வருகின்றனர். தற்போது வெடித்துள்ள எரிமலையில் இருந்து பெரிய அளவில் தீக்குழம்பு வெளியேற நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.