கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே ஏற்கனவே புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது, அவருக்கு சிறுநீரகம் மற்றும் இதய செயலிழப்பு தொடர்பான பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் பீலே. மூன்று முறை உலகக் கோப்பையை வென்றவர். இவர் பிரேசில் நாட்டு அணிக்காக பல சாதனைகளை செய்த இவர் அந்நாட்டின் அடையாளமாக இருந்து வருகிறார். கால்பந்து வரலாற்றில் 1958, 1962, 1970- களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
. உலக அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களை அடித்து சாதனையையும் புரிந்துள்ளார் பீலே. பின் பிரேசில் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
இதனிடையே 82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டுள்ளது. முதலில் சிறுநீரிக கற்கள் அகற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிக்சை அளித்தபோது பெருங்குடலில் கேன்சர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக அந்தக் கட்டி அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இதய செயழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சையை அவ்வப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30.11.2022 காலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து பீலே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் கெலி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதில், `தற்போது அப்பா நலமாக உள்ளார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. விரைவில் அவருடனான புகைப்படத்தை வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் பீலேவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், உலகக்கோப்பை கால்பந்து தொடர்களும் விறுவிறுப்பாக நடைபெற்று த முடிந்தது. கடந்த வாரம் நடைபெற்று முடிந்த கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார், பீலே சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த நிலையில், பீலேவுக்கு நுரையிரலில் தொற்று ஏற்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானார். பின்னர் அதற்கான சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து, கேன்சருக்கு எதிராக போராடும் விதமாக கீமோதெரிபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து பீலேவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக பிரேசில் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டவில்லை.
அதேபோல், பீலேவுக்கு ஏற்பட்ட கேன்சர் பாதிப்பானது உடலின் பிற உறுப்புகளிலும் பரவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி பீலே மனைவி, உறவினர் என யாரும் எந்த தகவலையும் உறுதிபடுத்தவில்லை. பீலேவுக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சை எதிர்பார்த்த பலன் அளிக்காத காரணத்தால் அவருக்கு நோய் தடுப்பு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிரேசில் நாட்டின் பிரபல நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பீலே குடும்பத்தார் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீலேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக பிரேசிலிய ஜாம்பவான் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.