அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர், நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடி முக்கிய போட்டியாளராக உள்ளார் என்று அஸ்லே டோஜே தெரிவித்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
அஸ்லே டோஜே அளித்த பேட்டியில் உக்ரைன் விவகாரத்தில் மோடிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அஸ்லே டோஜே, மோடியின் நிலைப்பாட்டை பாராட்டி பேசி இருந்தார்.
இந்த நிலையில், மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று வெளியானது, பொய்யான செய்தி என்றும் இது போன்ற செய்திக்கு நாம் கை, கால், மூக்கு வைக்கக் கூடாது என்றும் அஸ்லே டோஜே விளக்கமளித்துள்ளார்.
Why has @ANI not tweeted this statement by Asle Toje? 🤔 pic.twitter.com/C3c6pUBdeI
— Mohammed Zubair (@zoo_bear) March 16, 2023
மேலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த தகவலை அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் மோடியை பற்றி நோபல் பரிசு தேர்வுக் குழு தலைவர் பாராட்டி பேசிய வார்த்தைகளை கொண்டு நோபல் பரிசு போட்டியாளர்களில் மோடி முதன்மையானவராக உள்ளார் என்று திரித்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருப்பதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.