ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்க வழி செய்யும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு அங்குள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியின் சகாவுமான சுரீந்தர் சவுதாரி என்பவர் , இந்த விவகாரத்தில், அநாகரீகமான முறையில் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்..
’’ஜம்மு, அமைதியான பிரதேசமாகும். உயர்ந்த கலாச்சார பெருமை கொண்டது. கிராமங்களில் இருந்து இங்கு நிறைய மாணவிகள் படிக்க வருகிறார்கள்.’’ என்று குறிப்பிட்ட சவுதாரி,’’ ’இந்தியாவின் மற்ற பகுதி ஆட்களும் இங்கு நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜம்மு-காஷ்மீர் வந்து நிலம் வாங்கி நிரந்தரமாக தங்கினால் என்ன ஆகும் தெரியுமா? இங்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும்.’’ என்று தெரிவித்துள்ளார்
-பா.பாரதி.