பாகிஸ்தான் உடன் விளையாட இந்தியா பயம் : பாக் கிரிக்கெட் வாரியம்

Must read

ஸ்லாமாபாத்

ந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட, பாக் டீம் பலம் பொருந்தியதாக உள்ளதால் பயப்படுகிறது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷராயர் கான் கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் உடன் இந்தியா இருநாடுகளுக்கான போட்டிகளில் கலந்துக் கொள்வதில்லை.   சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற விளையாட்டுகளில் மட்டுமே பாக் உடன் இந்தியா மோதுகிறது.

சாம்பியன்ஸ் ட்ராபி ஃஃபைனலில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.  அந்த வெற்றியப் பற்றி ஒரு பேட்டியில் பாக் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியர் கான் கூறியதாவது :

”பாக் கிரிக்கெட் டீம் என்றுமே வலுவானது.   அதன் வலிமை சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.   எங்கள் டீம் வலிமை உள்ளதாக இருப்பதால் எங்களுடன் விளையாட இந்தியா பயப்படுகிறது.  இரு நாடுகளுக்கிடையே ஆன போட்டிகளில் கலந்துக் கொண்டால் இந்திய டீம் வலிமையற்று இருப்பது வெளிப்பட்டுவிடும் என்னும் ஒரே காரணத்தில் தான் இந்தியா போட்டியை தவிர்க்கிறது “ என தெரிவித்துள்ளார்.

உண்மையில் சாம்பியன்ஸ் ட்ராபி, உலக கோப்பை போட்டிகள் ஆகிய பல போட்டிகளில் இந்தியா பாக் உடன் மோதி தோற்கடித்து இருக்கிறது.  2011; நடந்த உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் பாக் உடன் மோதி மாபெரும் வெற்றியை தோனி தலைமையில் பெற்றது.

பாக் கிரிக்கெட் வாரியமும், பி சி சி ஐயும் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி 2015 முதல் 2023 வரை பல இருநாடுகள் கலந்துக் கொள்ளும் போட்டிகள் முடிவு செய்யப்பட்டிருந்தன.   ஆனல் இந்திய அரசு அவைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.   பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரை அந்நாட்டுடன் நேரடி கிரிக்கெட் போட்டியை அனுமதிக்க மாட்டோம் என இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது

 

 

 

More articles

Latest article