Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
புதிய வாடிக்கையாளர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என்றும் டெபாசிட் மற்றும் டாப்-அப் பணம் பெறுவது கூடாது என்றும் தடை விதித்த ஆர்.பி.ஐ., வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, ஃபாஸ்ட்டேக், என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது என Paytm நிறுவனத்துக்குக்கு தடை விதித்தது.
வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
பாஜக-வுடன் தரவுகளை பகிர்ந்து கொண்டதாக Paytm நிறுவனம் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் Paytm நிறைய விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.
▪️ ரிசர்வ் வங்கி 35 கோடி PayTm வாலெட்டுகளை ஆய்வு செய்தது, அதில் 31 கோடி வாலட்டுகள் செயலிழந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
▪️ ஒரு பான் கார்டு, ஆயிரக்கணக்கான கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
▪️ லட்சக்கணக்கான கணக்குகளின் KYC பதிவுசெய்யப்படவில்லை.
▪️ தவறான… pic.twitter.com/bZZi0rc05K
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) February 5, 2024
35 கோடி Paytm வாலெட்டுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ததில் 31 கோடி வாலட்டுகள் செயலிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
லட்சக்கணக்கான கணக்குகளின் KYC பதிவுசெய்யப்படவில்லை என்றும் ஒரு பான் கார்டு, ஆயிரக்கணக்கான கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் Paytm நிறுவனம் தொடர்ந்து தவறான தகவல்களை ஆர்.பி.ஐ.க்கு வழங்கிவந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
Paytm பேமெண்ட் வங்கிக்கும் PayTmக்கும் இடையிலான பரிவர்த்தனை தரவு குறித்து ரிசர்வ் வங்கி பலமுறை கவலை தெரிவித்தும் அந்நிறுவனம் இதை சரிசெய்ய தேவையான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.