சம்பள குறைப்பு : தயாரிப்பாளர்களுடன் நடிகர்கள் பேச்சுவார்த்தை..
மலையாள திரை உலகில் நட்சத்திரங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள விவகாரம் தொடர்பாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அங்குள்ள தயாரிப்பாளர்களில் பெரும் பாலானோர், பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் எடுப்பவர்கள் ஆவர்.
கொரோனாவால் அவர்கள் நொடித்துப் போய்விட்டனர்.
‘’ நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ,தங்களது சம்பளத்தில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்தால் மட்டுமே இனி படங்கள் தயாரிப்போம்’’ என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மலையாள சினிமா நடிகர்- நடிகைகள் சங்கமான ’அம்மா’ ,தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளது.
‘’ சம்பள குறைப்பு குறித்து நாங்கள் தயாரிப்பாளர்களுடன் பேச்சு நடத்தத் தயார்’’ என்று அந்த கடிதத்தில் ’’அம்மா’’ குறிப்பிட்டுள்ளது.
இதுபோல், கேரள சினிமா தொழிலாளர் கூட்டமைப்பும், ஊதிய குறைப்பு பற்றி தயாரிப்பாளர்களுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.