டில்லி
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதத்தை செலுத்தியதால் தாம் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக பொருள் இல்லை என பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்து்ள்ளார்.
பிரபல முத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் பதிந்த இரு டிவிட்டர் பதிவு கடும் சர்ச்சையை உண்டாக்கியது. அவற்றில் ஒன்றில் அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தனது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணம் செய்த படத்தை பதிர்ந்து அவர் விமர்சித்திருந்தார். இதையொட்டி உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோர பிரசாந்த் பூஷன் மறுப்பு தெரிவித்தார். அதையொட்டி அவருக்கான தண்டனை குறித்து நீண்ட விவாதம் நடந்தது. முடிவில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பிரசாந்த் பூஷன் ரூ.1 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் செலுத்தவில்லை எனில் 3 மாத சிறை தண்டனை மற்றும் வழக்கறிஞர் தொழிலை நடத்த 3 மாத தடை விதிக்கப்படும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி நாடெங்கும் இருந்து ஏராளமானோர் அவருக்கு அபராதம் செலுத்த நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளனர். அவற்றை கொண்டு கருத்து தெரிவிப்பதற்காக தண்டனை பெறுவோருகு உதவ அவர் ஒரு நிதியம் அமைத்துள்ளார். அதற்கு உண்மை நிதியம் என பெயரிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிரசாந்த் பூஷன் இன்று ரூ,.1 அபராதத்தை செலுத்தினார்,
அப்போது அவர் செய்தியாளர்களிடம், “நான் இந்த அபராதத்தை செலுத்தியதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக பொருள் இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றை இன்று பதிவு செய்துள்ளேன். நீதிமன்ற அவமதிப்பு தண்டனை பெறுவோருக்கு மேல் முறையீடு செய்ய வழி வகை அறிவிக்க கோரியும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளேன். அரசு தன்னை எதிர்த்து குரல் கொடுப்போரை ஒடுக்க செய்து வரும் முயற்சிகளை தடுக்க உண்மை நிதியம் உதவி செய்யும்.” என தெரிவித்தார்,.