டில்லி

மாநில மற்றும் மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் 22-28% ஊதிய உயர்வை அரசு அளித்துள்ளது.

கல்லூரியில் பணி புரிவோர்க்கான ஊதிய உயர்வு பற்றிய பரிந்துரையை பல்கலைக்கழக மானியக் கமிஷன் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.  அதை ஆராய்ந்த அமைச்சகம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 22-28% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.   அலவன்சுகள் பற்றிய முடிவும் விரைவில் எடுக்கப்படும் என கூறியுள்ளது.

இந்த ஊதிய உயர்வின் மூலம் 8000 பேருக்கு மேல் பயனடைவார்கள்.  கடைசியாக 2006ஆம் வருடம் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது.  பல கல்லூரி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த பின் இந்த உயர்வு தரப்பட்டுள்ளது. தற்போதைய உயர்வின்படி, அடிப்படை ஊதியம் ரூ 6000 பெறுவோருக்கு ரூ. 10396 ஆக உயரும்.

இந்த ஊதிய உயர்வினால் ஆண்டொன்றுக்கு ரூ 70000 கோடி வரை கூடுதல் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.