இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இது பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்ற கொண்டாத்தை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து, ஸ்ருதிஹாசன், நிவேதா தாமஸ், அஞ்சலி மற்றும் அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. அதோடு கிட்டத்தட்ட 3 வருடம் கழித்து வெளியாகும் பவன் கல்யாணின் படம் என்பதால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Brace yourself Saab Aagaya!! 👨🏻⚖️#VakeelSaab Releasing Today @PawanKalyan #SriramVenu @shrutihaasan @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @MusicThaman @bayviewprojoffl @adityamusic#VakeelSaabInTheatres pic.twitter.com/yP2HOQX53s
— Boney Kapoor (@BoneyKapoor) April 9, 2021