ஆந்திர மாநிலத்தில் 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நடிகர் பவன் கல்யான் போட்டியிடும் ஜனசேனா கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் ஆகியோருடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், ஆந்திராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் பவன் கல்யாண் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவன் கல்யாணின் உடல்நிலை மோசமடைந்ததால் தற்போது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Patrikai.com official YouTube Channel