சென்னை: வரும் 21ந்தேதி கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னை – அண்ணா அறிவாலயத்தில், வரும் 21-10-2020 அன்று, கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 21ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கழக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் வெளியிட்டு உள்ளார்.

Patrikai.com official YouTube Channel