மேஷம்

எத்தனையோ பெரிய சுறாக்களை சந்தித்து நீந்தி வந்துட்டீங்க. அரை அங்குல மீனைப் பார்த்து பயப்படறீங்களே? விவேக் பாஷைல சொன்னால் “டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி”.  அலுவலகத்தில் வெளியூர் வெளிநாடுன்னு அனுப்புவாங்க. சென்று வென்று வாருங்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும். எனினும் கூடவே தேவையில்லாத பதற்றமும் டென்ஷனும்கூட இருக்கும். பாதி நீங்களே ஏற்படுத்திக்கொள்வது. ஸாரி. சஞ்சலங்கள் விலகும். நண்பர்களால் நன்மையும் லாபமும் ஏற்படும். அவர்களின் உதவி அதிகமாகக் கிடைக்கும். அரசாங்க நன்மைகள் கிடைக்கும்.  கணவருக்கு/ மனைவிக்கு நன்மை ஏற்படும்.

ரிஷபம்

எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க.போனவை எல்லாம் வரும். திருமணத் தடை சீக்கிரம் நீங்கும். திருப்தியாகத்தான் இருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கே தெரியும். நியாயமாகக் கிடைக்க வேண்டியது குறைவின்றிக் கிடைக்கிறதே!பிறகென்ன புலம்பலாம்? குடும்பத்தலைவி/தலைtவர்களே,.. அச்சம் தவிருங்க.வெளியூர் வெளிநாடு என்று  சுத்திய டிச்சுக்கிட்டிருந்தவர்களுக்குத் தாய்நாடு திரும்ப ஆசை ஏற்பட்டால் அதற்கான முயற்சி களில் ஈடுபட்டால் நல்லபடியாக ஈடேறும்.கடன்களை முடிச்சுட்டீங்களே வாழ்த்துக் கள்.முடிக்காதவங்க முனைந்தால் முடிஞ்சுடுமே! மனதில் விரக்தி நிலவ அனுமதிக்காதீர் கள். கவர்ச்சி அம்சம் கூடுதலாகும். மேடை ஏறிப் பேசிக் கைத்தட்டல் வாங்குவீங்க.

மிதுனம்

கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்புவீங்க. குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேளமாவது கொட்டும். அதாகப்பட்டது… காது குத்தல்.. பர்த்டே பார்ட்டி.. எக்ஸெட்ரா… நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்களைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.  எப்பவுமே ஒரு ஜாக்கிரதை உணர்ச்சியோட வளைய வந்துட்டீங்கன்னா பிரச்சினையே இருக்காது பாத்துக்குங்க. இப்படிச்செய்வதன் மூலம் இப்பவே நிம்மதியை அதிகரிச்சுக் குங்க. கல்விக்காக நிறைய செலவை செய்வீங்க.  அது உங்களுடைய கல்வியாகவும் இருக்கலாம் மற்றவர்களின் கல்வியாகவும் இருக்கலாம். தெரிந்தவர்களின் க.இ. ஏன் முன்பின் தெரியாதவங்களின் கல்வியாகவும் கூட இருக்கலாம். எதுவாயினும் அது உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் என்பது ஹண்ட்ரட் சதவீதம் உறுதி.

கடகம்

ஆரோக்ய விஷயத்தில்.. குறிப்பாய்ச் சொன்னால் .. சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டால் போதுமுங்க. ஆரோக்யம் சூப்பரா இருக்கும். தம் அடிக்கவோ தண்ணி போடவோ நண்பர்கள் வற்புறுத்தினால் அவர்கள் நண்பர்கள் அல்ல எதிரிகள் என்பதை சேவ் பண்ணி பாஸ்வேர்ட் போட்டு வெச்சுடுங்க. பின்ன என்னங்க? கஷ்டத்தில் கை கொடுப்பவன் நண்பன். கஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பவன் அல்ல என்பதை அவங்க மறக்கலாம். நீங்க மறக்கக்கூடாது. நீங்க பேசுவதெல்லாம் வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க. குழந்தைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு வாரக் கடைசியில் நல்ல செய்தி உண்டு.

சிம்மம்

நண்பர்களால் நன்மை நிறைய ஏற்படும்.  அதிலும் குறிப்பா எதிர்பாலினத்து நண்பர்கள் மூலம்.. வாழ்க்கையில் சந்தோஷமான திருப்பு முனை உண்டுங்க. அது திருமணமாகவும் இருக்கலாம் .. காதலாகவும் இருக்கலாம்  இரண்டுமே இல்லையாங்க? அப்படியென்றால் புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. (அனேகமாய் மாட்டீங்க என்றாலும் ஒரு வார்த்தை சொல்லி வெச்சுடலாமேன்னு…) எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதே அதுக்கே பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்க வேண்டாமோ! பயணத்துக்கு ரெடியா? கம் ஆன்.

கன்னி

தன்னம்பிக்கையை வளர்த்துக்  கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ கட்டி சேரணுங்க. ஒன் மினிட் யோசனை செய்து பாருங்க? உங்களுக்கில்லாத திறமையா? உங்களால் எத்தனை பேரை பீட் பண்ண முடியும்? ஆனாலும் மனசுக்குள் தேவையே இல்லாத ஒரு தாழ்வு மனப்பான்மை எதுக்காம்? அதுக்காகத்தான் சொன்னேன். . புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும்? அப்புறம் அசடு வழிய வேண்டாம்,  பை த வே .. திருமணம் நிச்சயமாகாமல் இப்படியும் அப்படியும் கண்ணாமூச்சி காட்டினாலோ.. ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடைப்பட்டுவிடுமோ என்ற டென்ஷன் ஏற்பட்டாலும்.. பயமே வேண்டாம். எல்லாம் சிறிது காலத்தில் மிக நல்ல முறையில் நடந்தேறி உங்களை மகிழ்ச்சிக்கடலில் தூக்கிப்போடும்.  அநாவசியமாய்க் கவலைபப்ட்டு நிம்மதியை இழக்காதீங்க.

துலாம்

நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. தைரியமாய் இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத நன்மை ஒன்று  வாரக் கடைசியில் கிடைக்கும். அது மட்டுமில்லை. அலுவலகத்தில் ஏற்படவிருந்த பெரிய நஷ்டம் ஒன்று உங்க புத்திசாலித்தனமான அணுகுமுறையால் தீர்ந்துவிடும். எனவே பாராட்டும் மேலிடத்து ஷொட்டும் கிடைக்கும். அமைதியை இழக்காத உங்களின் அணுகுமுறையால் பல  வெற்றிகளை அடைவீங்க, அதே சமயம் டென்ஷன் ஆகி அமைதியை/ ஆரோக்யத்தைக் கெடுத்துக்காதீங்கன்னு மென்ஷன் செய்ய வேண்டிய கடமை என்னுடையது. புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க.

விருச்சிகம்

அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லையே. இப்ப செய்வதும் எதுவும் வேஸ்ட் இல்லைங்க. நியாயமான செலவுதான். மகிழ்ச்சியையும் நிம்மதியையும் புண்ணியத்தையும் கல்வியையும் தரக்கூடிய தன்மை உள்ளதுதான், எனவே அடிச்சுவுடுங்க. கடந்த ஒன்றரை வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்த போயிருந்தது. இப்போதான் அது நினைவுக்கு வரும்! சுற்றமும் நட்பும் சூழ ஜாலியாக இருப்பதற்கான சந்தர்பபம் உங்களைத் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே/ சுகமே.

சந்திராஷ்டமம் : ஜனவரி 18 முதல் ஜனவரி 20 வரை

தனுசு

தொட்டிலுக்கு அழகான டிசைனில் புதுத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. நிறைய ஆடை அணி மணிகளும் நகை வகைகளும் வாங்கப் போறீங்கம்மா. இத்தனை காலம் உங்கள் மீது அழுத்திக் கொண்டிருந்த  கவலையும் வேதனையும் டாட்டா  காண்பித்து விடை பெற்று ரயிலோ பஸ்ஸோ விமானனோ ஏறிப் போய்விடும். அது மட்டுமில்லைங்க.. இனி குழந்தைகளைப் பற்றி நீங்க  நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க.. தந்தை வழி உறவினர்களைக் கண்டு பேசவும், சந்தித்து சந்தோஷப்படவும் வாய்ப்பு வரும். யார் கண்டது? ஒரு வேளை இப்போது உங்க ஜாதகத்தில் வலுவான தசா புக்திகள் நடந்து கொண்டிருக்குமானால்… பாட்டன் வழி சொத்து அல்லது தந்தையின் பிராபர்ட்டி உங்கள் பெயருக்கு வருவதற்கும் சாத்தியம் உள்ளது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 20 முதல் ஜனவரி 22 வரை

மகரம்

குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகிவிட்டதே! அனைத்திற்கும் காரணம்  உங்க பொறுமையான அணுகுமுறை மட்டுமில்லை.. சமீபத்திய குரு பெயர்ச்சியும்தான். நீங்க வேற மாதிரிய அவங்களை ட்ரீட் செய்திருந்தால் இந்நேரம் அவங்க உங்களுக்குப் பகையாக்கூட ஆகியிருப்பாங்க. ஆனால் உங்க நல்ல காலம்.. இப்ப அவங்க உங்க அருமையை உணர்ந்துட்டாங்க. வாக்கில் கவர்ச்சி அம்சம் கூடும்.  இதனால் மற்றவர்களை சமாதானம் செய்யும் கடமையைச் செய்வீங்க. பிரிந்த குடும்பங்களையும், நண்பர்களையும் சேர்த்து வைப்பீங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. ஏராளமான வெபற்றியுடன் வருவதால் உங்களுக்கும் மகிழ்ச்சிதான். அனேகமாக அவங்க உங்க மகன் அல்லது மகளா இருக்கவும் ஓரளவு வாய்ப்பு உள்ளது. எனவே இரட்டிப்பு சந்தோஷம்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 22 முதல் ஜனவரி 25 வரை

கும்பம்

எடுத்த காரியத்தை போஸ்ட்போன் பண்ணிக் கடைசியில் மலையாய் வேலையைக் குவிச்சுக்காதீங்க. ஏனெனில் இதைவிட நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றும் நேரம் செலவு செய்ய வேண்டிய பிரச்சினைகள் (நல்ல விஷயங்கள்தான்) ஏராளமாக உங்கள் முன் வந்து கியூ கட்டி நிற்கப்போகுதுங்க.  உங்க மம்மிக்கு இருந்து வந்த பிரச்சினைகளுக் கெல்லாம் வந்தேமாதரம்னு மங்களம் சொல்லி மகிழ்ச்சியடைவீங்க. ஒரு வேளை அம்மா வுடன் டிஷ்யூம் டிஷ்யூம் இருந்திருந்தால் அதுவும்கூட சரியாகும். வேறென்ன? அவங்கதான் விட்டுக்குடுப்பாங்க. மம்மியாச்சே. தந்தைக்காக நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். மற்றவர்களின் கல்விக்காகவும்,

மீனம்

திருமணத்திற்காகக் காத்திருப்பவர்கள், குழந்தைக்காக ஏங்குபவர்கள், உத்யோகத்தில் தேய்ந்து கொண்டு மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், வீட்டை ஆரம்பித்துவிட்டு விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்திகள் உண்டு. பல சுப நிகழ்ச்சி கள் தடைப்பட்டிருக்கும். எல்லாமும் இனி சுபமாய் முடியும். குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும்மா . சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும் – வைசி வெர்சா. உங்கள் நல்ல மனசு இப்போது மேலும் அதிகமாக வெளிப்படும். குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உங்கள் உதவியும் அவர்களால் உங்களுக்கு உதவியும் கிடைக்கும்.