மேஷம்

வீடு வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட பதவி உயர்வை இனி எதிர்பார்க்கலாம்.  தன லாபத்தை இவ்வாரம் தரும். மனக்குழப்பமும், சிறு சிறு சச்சரவுகளும் விலகும். சாப்பிட்ட சாப்பாடு ஜெரிக்காத காரணத்தினால் சிறு தொல்லை ஏற்பட வாய்ப்பு இருக்குதானுங்க.. இட்ஸ் ஓகே. அவ்வப்போது சரியாயிடும். குடும்பத்தில் சில சச்சரவுகள் தோன்றினாலும் கவலைப்படவே தேவையில்லைங்க. பெரியோர்களின் அருளாசியால் நன்மை விளைய வாய்ப்பு அதிகம். எதிர்பார்க்காத வெளியூர்ப் பயணம் ஒண்ணை எதிர்பாருங்கள். அரசியல் மற்றும் பொதுத்துறையில் உள்ளவங்க நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

சந்திராஷ்டமம் :  பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 18 வரை

ரிஷபம்

ஷேர் மார்க்கெட் விவகாரங்களில்  ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபகரமான போக்கு தென்படும். அன்னிய மொழி பேசுபவர்களின மூலமாக ஆதாயம் பெறுவீங்க.  கொடுத்த வாக்கைக் காப்பாற்றி நல்ல  பெயர் எடுப்பீங்க. எடுத்த காரியங்களில் ஈஸியா வெற்றிபெறுவீங்க. இல்லம் தேடி சுபமான தகவல்கள் வரும். பணப் பற்றாக்குறை தீர்ந்துவிடுமுங்க. பாசம்மிக்க உறவினர்களின் உதவி கைகூடி, சுப நிகழ்ச்சிகளுக்கான தேவைகள் பூர்த்தி யாகும்.  இல்லத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு சரளமாக இருக்கும்.  சிறு அளவில் தொல்லைகள் உண்டானாலும், பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.  புதுசா கார் .. பைக்.  வாங்கும் யோகம் உண்டுங்க. என்றைக்கோ காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் :  பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 20 வரை

மிதுனம்

பிரிந்து சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவார்கள். சிம்ப்பிளாய்ச் சொன்னால் காய்விட்டவர்கள் பழம்விடுவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு, மேலதிகாரிகளின் ஆதரவும் அன்பும் ஷ்யூராக் கிடைக்குமுங்க.  சுருங்கச் சொன்னால்.. பதவி உயர்வு வரவும் வாய்ப்புண்டு. உண்மையான உங்கள் உழைப்பு வீணாகாதுங்க. வெளிநாட்டுப் பயணமும், வெளிநாட்டு செய்திகளும் நன்மை தரும் விதமாக அமையும். இத்தனை காலமாய்த் திருமணத்தடை இருந்தவங்களுக்கு உடனடியாக மேளம் கொட்டும் நேரம் வரும். இத்தனை காலமாக படிப்பு… உத்யோகம் போன்ற காரணங்களுக்காகப் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவாங்க. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு  பிரபலமான மனிதரின் சந்திப்பு நிகழ்ந்து சந்தோஷம் அளிக்கும்.  

கடகம்

ஆரோக்கியம் மிக நல்ல நிலையில் இருக்கும். பொருளாதாரம் சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த கடன் அடைந்து … மகிழ்ச்சி ஏற்படும்.  பல காலமாய் நீங்க எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த தொகை கிடைக்கும். திருப்தி தரும் வாரம். பிரிந்து சென்றவர்கள் உங்களைப் புரிஞ்சுக்கிட்டு வந்த சேருவாங்க. எதிரிகள் காணாம போவாங்க. பயப்படாதீங்க. நெருங்கிய நண்பர்கள் வழியே சந்தோஷம் தரும் செய்தி ஒண்ணு வந்து சேரும். நீண்ட நாளா ஆசைப்பட்டுக்கிட்டிருந்த எண்ணம் ஒண்ணு நிறைவேறும். புதிய பண வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் நன்மைகள் கிடைக்கும். எந்த வகையில்னு கேட்கறீங்களா? அது பதவி உயர்வாகவோ அல்லது வருமானம் அதிகரிப்பதாகவோ இருக்கலாம்.

சிம்மம்

வெளிநாட்டுப் பயணத்திற்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். குறிப்பாகக் குளிர் தேச பயணங்கள் அனுகூலமாக முடியும்.  வெளிநாடு சென்று படிக்க எண்ணும் மாணவர்களுக்கும் வெற்றி.. வேலை தேடுபவர்களுக்கும் சக்ஸஸ்தான். பெண்களுக்கு உத்தியோகத்தில் சின்ன நிகழ்ச்சிகள் காரணமாய் எரிச்சல் ஏற்படும். இப்போதைக்கு அவசர முடிவு எதுவும் எடுக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்பவும் அவசியம். அலுவலக சம்பந்தமான விஷயமானாலும் சரி.. குடும்ப சமாசாரமானாலும் சரி.. எந்த ஒரு காரியத்திற்காகவும் அதிகம் கவலைப்பட வேண்டாம். ப்ளீஸ் வெயிட். பொறுமையா இருந்தா முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். எனவே டோன்ட் ஒர்ரி.

கன்னி

பிரிந்து சென்ற நண்பர் ஒருவர் அல்லது சிநேகிதி ஒருத்தி,  நட்பு பாராட்டி உங்களைத் தேடி வரக்கூடும். நடந்ததையெல்லாம் மனசுல வெச்சுக்காம சிரிச்சுக்கிட்டே ஏத்துக்குங்க. குடும்பத்தில் இருந்துக்கிட்டிருந்த பழைய பகை விலகும். உறவுகள் பலப்படும் . குழந்தை இல்லாதவங்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. பழைய கடன்கள் தீர்ந்து நல்ல சந்தோஷம் உண்டாகுமுங்க. கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த டென்ஷன்ஸ்ஸெல்லாம் எரேசர் வைச்சு அழித்ததுபோல் மறையும். சுபகாரியங்கள் நடைபெறும் வாரம் இது. இரும்பு பொருள் டீல் செய்யறவங்களுக்கும், நெருப்பு சம்பந்தமான தொழில் செய்யறவங்களுக்கும், சமையல் மற்றும் உணவு விடுதி நடத்துபவர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் இன்கிரீஸ் ஆகுமுங்க.

துலாம்

வங்கி போன்ற இடங்களில் உத்தியோகத்தில் இருப்பவா்கள், எதையும் கால நேரத்தோடு திட்டமிட்டுச் செயல்படுங்கள். வெற்றி ஷ்யூர்தான் என்றாலும் கொஞ்சமாச்சும் கவனமுடன் இருக்கணுங்க. உங்கள் செயலில் தேக்க நிலை ஏற்படாம பார்த்துக்குங்க.  இந்த சோம்பல் இருக்கு பாருங்க சோம்பல்.. அதை மட்டும் அனுமதிக்கவே செய்யாதீங்க. நல்ல நண்பர்கள் உதவியை நாடுங்க. பிரச்சினைகளைக் குறைக்க அந்தச் சந்திப்பு உதவும்.  பணம் கொடுத்து வாங்குபவர்கள் அல்லது லேவாதேவி பிசினஸ் செய்யறவங்க சற்று கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. பணத்தைக் கொடுத்தவங்க கிட்டேயிருந்து, திரும்பக் கிடைப்பதில் பிரச்சினை உண்டாகக்கூடும். கடைசியில் வின் பண்ணிடுவீங்கன்னு வெச்சுக்குங்க. இருந்தாலும் டென்ஷனை அவாய்ட் செய்ய முயற்சிக்கலாம்ல.

விருச்சிகம்

புதிய முயற்சியில் ஈடுபடுவோரும், புதிய தொழில் ஆரம்பிப்போரும் கொஞ்சம் நல்லா திங்க் பண்ணி  முடிவு எடுக்க வேண்டியது முக்கியமுங்க. சிலருக்கு விரும்பாத இடத்தில் டிரான்ஸ்ஃபர் ஆகி, கண்காணாத இடத்தில் ஒர்க் பண்ண வேண்டிய வாய்ப்பு வரலாம்.  ஈஸியா எடுத்துக்கிட்டு, அதை ரிலாக்ஸ்டா செய்ங்க. சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருங்க. சுத்தமான சுகார உணவை சாப்பிடுங்க. உடல் நலத்தைக் கெடுக்கும உணவுகளை அவாய்ட் செய்ங்க. மருத்துவச் செலவுங்க சிறிய அளவில் ஏற்படும். வீட்ல உள்ள வயதானவங்களோட ஆரோக்கியத்தில் கவனம் தேவைங்க. உங்க முயற்சிக்கு மனைவி வழி உறவினர்கள் ஹெல்ப் செய்வாங்க. சொத்துக்களை பாகப் பிரிவினை செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ ரொம்பவே கவனமாய்ச் செய்யணுங்க. முடியும்னா.. சாத்தியம் இருந்தா.. சிரமம் இல்லைன்னா… அவாய்ட் செய்வது நல்லது.

தனுசு

பெற்றோர் வழியில் பிரியம் கூடும் . டியர் ஃப்ரெண்ட்ஸ் வந்து,  நல்ல தகவலைத் தருவர். வாகனத்தைப் பராமரிக்கும் வேலையை ரொம்ப நாளா தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தீங்களே… அப்பாடா. இப்பதான் அதற்கு வேளை வந்துச்சு.  உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்பட்ட சின்னச் சின்னத் தொல்லைகள் அகலும். கடந்த காலத்தில் ஏற்பட்ட  பிரச்சினைகளைக் கூட உங்களால் சமாளிக்க முடியும். கொடுக்கல் வாங்கல் ஓரளவு சுமாராகத்தாங்க இருக்கும். பிரிந்த உறவுகளை புதுப்பிக்க முயற்சி செய்வீங்க. ஆனாலும் கொஞ்சம் மெதுவாய்த்தான் ஒர்க் அவுட் ஆகும்.  உத்தியோக ரீதியான விஷயத்தில் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்காதீங்க. நீங்க செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும்  மறைந்த பெரியோர்களின் ஆசி உண்டுங்க. ஏனெனில் அவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நீங்க சரியாச் செய்துக்கிட்டிருக்கீங்க.  .

மகரம்

கடந்த வாரங்களில் எதிர்பாராமல் வேகமாய் வந்த சிரமங்கள் மெதுவாய் விலகிச் செல்லும். பூமி சம்பந்தமான விற்பனை அல்லது பர்சேஸ் சாதகமாக அமையும். சிலருக்கு நீண்ட கால வழக்குகளில் உங்கள் பக்கம் சாதகமாகத்  தீர்ப்புகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வக்கீல் மற்றும் சட்ட சம்பந்தமான தொழில் புரிவோர்கள் நல்ல திருப்பங்களை சந்திக்க நேரிடும். தாயாருக்கு நன்மைகள் உண்டு. மாணவர்களுக்கு குட் நியூஸ் உண்டு.  பண விஷயத்தில் கவனமாக இருக்கணுங்க. ஜாமீன் கையெழுத்து போடுவதோ கடன் வாங்கித் தருவதையோ தவிர்க்கவும். உங்க  திறமைகள் உலகத்தக்கு வெளிப்படையாத் தெரியும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்ப சூழலும் மனைவியின்/ கணவரின் அக்கறையும் மனநிம்மதியைத் தரும்.

கும்பம்

தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உறவினர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். அல்லல் அகலும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். பயணம் பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். தொலைதூரப் பயணங்களால் சந்தோஷம் உண்டாகும். சில நன்மைகள் ஏற்படும்.  நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த நல்ல செய்தி தேடி வரும். குறிப்பாக…  பிரிந்து சென்ற உறவினர் தேடி வர வாய்ப்பிருக்குங்க. குலதெய்வ பூஜை செய்வது விட்டுப்போய் இருந்தால் அதை மீண்டும் செய்வது உங்கள் முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தித் தரும். உங்கள் கடுமையான மற்றும் சின்சியரான முயற்சி கண்டிப்பாக வெற்றியைப் பெற்றுத் தரும்.

மீனம்

குழந்தைகளின் கல்வி பற்றிய கவலையை விடுங்க.  அவங்களை உங்களோட மேற்பார்வையில் வெச்சுக்குங்க. இரும்பு பெட்ரோலியம் போன்றவை விற்பனை செய்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமுங்க. அரசாங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் தேவையற்ற சச்சரவுகளில் சிக்காதபடி கவனமாய் இருககப்பாருங்க. பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. அக்கம்பக்கப் பழக்கத்தில் சற்று கசப்பான அனுபவங்களை பெண்கள் சந்திக்க நேரலாம். கணவர் வழி உறவினரால் பணத்தாலோ, கருத்து வேறுபாட்டாலோ மனவருத்தம் தோன்ற வாய்ப்பிருப்பதால் அதைத் தவிர்க்கணும்மா.  அதிகம் பேசாமல் இருப்பது நன்மை தரும். தொழில் புரிவோர், புதியதாக விரிவாக்கம் செய்யவோ அல்லது தொழில் நடத்தவோ கடன் வாங்க  நேரிடலாம். அதை நல்ல முறையில் அடைக்க முடியும் என்று தோன்றினால் தைரியமாய் இறங்குங்க.

சந்திராஷ்டமம் :  பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 16 வரை