மேஷம்
உடல் உஷ்ணம் தாக்காதபடி கவனமாய் இருந்தீங்கன்னா உங்க ஆரோக்கியம் அருமையாய் இருக்கும். நீங்கள் முயற்சி செய்யாமலேயே உங்களின் கவரும் தன்மை அதிகமாகும். செல்வாக்கு கூடும். எதிர்பாலினத்தினரால் நன்மைகள் அதிகரிக்கும். காதல் திருமணம் தடங்கலின்றி கைகூடும். கணவர் / மனைவி தரும் ஆலோசனை குடும்பத்துக்கு நன்மை தரும். எனவே அதற்கு அனுமதியுங்களேன். வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு வெற்றிகரமாய்க் கைகூடும். படிப்பில் திடீரென்று ஈடுபாடு அதிகரிப்பதால் சாதனைகள் செய்வீங்க.
ரிஷபம்
ஏகப்பட்ட செலவுகள் வரிசையாய்க் காத்திருக்கு. சந்தோஷமான செலவுகளும், சுப செலவுகளும் அடுத்தடுத்து வர விருக்கின்றன. ஆனால் நீங்க என்ன செய்யறீங்க? ஆடை, அணிமணிகள், சென்ட், அது இது என்று வாங்க கார்டைத் தேய்க்கிறீங்க. திடீர்ன்னு அலுவலகத்தில் உங்களைக் கூப்பிடுவாங்க. ‘இந்தா சம்பள உயர்வு’ என்று கொடுப்பாங்க. இதற்காக எவ்வளவு காலம் காத்திருந்தீங்க? ஆரோக்கியத்தைப் பற்றி இருந்துவந்த கவலைகளும் டென்ஷன்களும் தீரப்போகிற காலம் இதோ கண்ணுக்குத் தெரிகிறது. கவலை வேண்டாம். பயமும் வேண்டாம்.
மிதுனம்
குழந்தைகளால் பெருமிதம் அடையும்படியான சம்பவங்கள் உங்களை தலைநிமிரச் செய்யும். பல காலம் நீங்க பெண்டிங்கில் வைத்திருந்த கோயில், குள பயணங்களுக்கு ஒருவழியாய்த் திட்டம் தீட்டுவீங்க. வருமானம் / சம்பளம் / லாபம் அதிகரிக்கும். குறிப்பாய் அரசாங்கம் மூலம் ஏதேனும் வருமானம் வரவேண்டியிருந்தால் அது இப்போது கிடைக்கும். கல்வி சம்பந்தமான முயற்ச்சிகள் மிகவும் நல்லபடியாக முடியும். பள்ளி, கல்லூரி சீட்களுக்காக அலைந்த அலைச்சல்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சினைக்கூட வராமல் பார்த்துக்குங்க.
கடகம்
சகோதர, சகோதரிகளுக்குக் கல்வி சம்பந்தமாக இருந்துவந்த சஸ்பென்ஸ்களும், கவலையும் தீரும். ஓய்வு ஒழிவின்றி பயணங்களும், அலைச்சலும் இருந்துகொண்டே இருக்கும். எனினும் அவற்றால் நன்மைதான் விளையும். அரசாங்க உத்தியோகத்துக்காகவோ அல்லது வங்கி வேலைக்காகவோ காத்திருந்தீங்களா? உங்களுக்குப் பிடித்தமான அந்த மெயில் இதோ வந்தாச்சு. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் பெருந்தன்மையான குணம் காரணமாக சரியாகும். செலவுகளெல்லாம் சுப செலவுகளாகவும் கல்வி சம்பந்தமானவையாகவும் இருக்கும்.
சிம்மம்
சகோதர, சகோதரிகளுக்கு வாழ்வில் விருப்பமான திருப்பங்களும் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சில் புத்திசாலித்தனம் அதிகரிப்பதால் அலுவலகத்திலும், நண்பர்கள் மத்தியிலும், அக்கம்பக்கத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். நீங்கள் மேடைப்பேச்சாளரா? இந்த வாரம் கைதட்டல் ஓயவே ஓயாதுங்க. பாராட்டுகளும், பரிசுகளும், விருதும் கிடைக்கும். தந்தைக்கு ஏராளமான நன்மைகள் காத்திருக்கின்றன. அவர் அரசாங்க நன்மைக்காகக் காத்திருந்தால் எதிர்பாலினத்தினரால் அந்த எண்ணம் நிறைவேறும்.
கன்னி
புத்திசாலித்தனம் அதிகரிப்பதால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தியும், துல்லியமும் கூடும். எனவே பாராட்டுப் பெறுவீங்க. குடும்பத்தில் திருமணம் அல்லது குழந்தைப்பேறு காரணமாக மகிழ்ச்சியும், குதூகலமும் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளால் பிரிந்திருக்கும் நண்பர்களும், தம்பதிகளும், குடும்பங்களும் சேர்ந்து சந்தோஷமடைவார்கள். தாயாருக்கு ஏற்பட்டிருக்கும் சுகவீனங்களும், பிரச்சினைகளும் மிகவும் தற்காலிகமானவையே. கல்வியில் ஏற்பட்டிருக்கும் தடை மிக விரைவில் நீங்கும்.
துலாம்
குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவர் / மனைவி அலுவலகத்தில் பாராட்டுப் பெறுவாங்க. எனினும், கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சின்னஞ்சிறு பிரச்சினை வளர்ந்து பெரிதாகிவிடாமல் பார்த்துக்குங்க. காதல் திருமணம் கைகூடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் கண்ணுக்குத் தெரிந்தாலும் அது நிறைவேற சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுங்கள். ப்ளீஸ். நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பது பற்றி தயவு செய்து மிகவும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு யாரையும் சுலபமாக நம்பிவிடவேண்டாம். தந்தைக்கு நன்மை ஏற்படும்.
விருச்சிகம்
வாயில் டேப் போட்டு ஒட்டிக்குங்க. அதுக்குமேல ஒரு நாலஞ்சு பூட்டுபோட்டு பூட்டிக்குங்க. எத்தனை தாமதமானாலும் வரவேண்டிய தொகைகள் தானாக வரும். நீங்கள் பேசுவது அனேகமாக பலிக்கும். எனவே நல்லதையே பேசுங்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷமான இணக்கம் இருக்கும். பள்ளி மாணவர்கள் சற்று கஷ்டமான சூழ்நிலைகளைச் சந்திக்கவேண்டிவந்தாலும் மீண்டுவருவீர்கள். ஆரோக்கியத்தைக் கண்ணைவிட முக்கியமாய் பாத்துக்குங்க. நீங்களோ மிகவும் அலட்சியம் செய்யறீங்க.
சந்திராஷ்டமம் : 20.4.2018 முதல் 22.4.2018 வரை
தனுசு
இப்போது உள்ள எந்தவிதமான மனக்கவலையும், பிரச்சினையும் தற்காலிகமானதே. இதையெல்லாம் சீரியஸ் என்று நினைத்து மண்டையைப் போட்டுக் குடைஞ்சுக்காதீங்க. பதவியும், சம்பளமும் உயர்வதோடு பொறுப்பும் அதிகரிக்குமுங்க.எதிர்பாலினத்து சினேகிதங்களால் பெரிய அளவில் உதவிகளும் நன்மைகளும் கிடைக்கும். காதல் கைகூட இன்னும் சற்றுப் பொறுமையாக இருந்தாகவேண்டும். மாணவர்கள் இன்னும் அதிகமாகப் படிப்புக்கான முயற்சிகள் செய்யவேண்டும்.
சந்திராஷ்டமம் : 22.4.2018 முதல் 24.4.2018 வரை
மகரம்
மகன் அல்லது மகள் மேடையேறி கைதட்டல் பெரும்போது குதூகலம் அடைவதோடு இந்தக் குழந்தையைப் பற்றி இவ்வளவு காலம் நம்பிக்கையின்றி இருந்தோமே என்று குற்ற உணர்ச்சி எற்பட்டலும் வியப்பிலை. திடீர் அதிர்ஷ்ட்டங்கள் இருந்தாலும் தயவு செய்து உழைப்பையும், முயற்சியையும் கைவிடவேண்டாம்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள், லாபங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி அளிக்கும். தந்தையின் புத்திசாலித்தனமான தீர்மானக்கள் காரணமாக நன்மைகள் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 24.4.2018 முதல் 26.4.2018 வரை
கும்பம்
கலைத்துறை சம்பந்தமான கல்வியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பாராட்டும், கைதட்டலும் கிடைக்கும். வேலை பார்க்குமிடத்தில் எதிர்பாலினத்தினரால் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய சின்னஞ்சிறு பிரச்சினகள் உங்களுக்கு, பூதாகாரமாகக் காட்சியளித்து பயம் ஏற்படுத்தினாலும் நீங்க அசைந்துகொடுக்காதீங்க. காலுக்கு வந்தது செருப்போடு போகும், இருவிதமான வருமானங்கள் வரும். பாக்கித் தொகைகள் வசூலாவதில் தாமதம் இருந்தாலும் உங்கள் பொறுமையைப் பார்த்து அது வளைந்துகொடுக்கும்.
மீனம்
ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் அனேகமாக வயிறுபற்றியதாகத்தான் இருக்கும். கணவன் / மனைவி பாராட்டுப் பெறுவார்க்ள். புகழ்பெறும் காலம் நெருங்கிவிட்டது. திடீரென்று கிடைக்கும் வாய்ப்புகள் உங்களை முழுநேர பிசியாக்கும். கண்சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பயந்து நடுங்காதீங்க. சற்று பொறுமையுடன் சரியான சிகிச்சைப் பெற்று கட்டாயம் மீளுவீங்க. வார்த்தைகள் சூடாக வராமல் கட்டாயமாக வாயில் ஒரு வலை போட்டுக்குங்க. வெளிநாட்டு வருமானம் வரும்.