மேஷம்   

தொழிலில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். அதுவும் அநாயாசமாக. நீங்க சின்ன முயற்சி எடுத்தாலே பெரிய நன்மைகள் உண்டாகும். பயணம் காரணம்ய்க் கொஞ்சம் சுகம் குறையும். எனினும் நீங்க அதைப்பொருட்படுத்தாத அளவுக்கு ஜாலியா இருப்பீங்க. தாய் நலனிலும் கவனம் தேவைப்படும். மனதில் நல்லெண்ணங்கள் மேலோங்கி அவற்றைப் பரப்பவும் செய்வீர்கள். உங்களைச் சிலர் விமர்சனம் செய்தாலும் பரவாயில்லைங்க. நல்ல செயல்களை நிறுத்தாதீங்க. படார் படார்னு  பேசறதை நிறுத்துங்க. மென்மையா இதமா எதையும் சொல்லுங்க. சகோதரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து குட் நியூஸ் வர்றதுங்க. அவங்களை நல்லா அனுசரிச்சுப்போவது நல்லது. உங்களுக்கும் நன்மை கிடைக்கும்.

ரிஷபம்

பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பெட்டர்.. பேசாமலேயே இருந்துவிடுங்க. வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணுமோ  எடுங்க. பண நெருக்கடி ஏற்படாதபடி கவனமா இருங்க. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். ஆனால் அது காலப்போக்கில் சரியாகும்.  தீய பழக்கங்களுக்கு இடம்தராமல் இருப்பது அவசியம். எனில் கெட்ட ஃப்ரெண்ட்ஸை விட்டு மைல்கணக்கா ஓடி ஒதுங்கி வந்துடுங்க. பொதுவாக அவ்வளவாகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும் மிக திடீரென்று ஃப்ளாஷ் அடித்த மாதிரி ஒரு அதிருஷ்டம் உங்களைத் தட்டிவிட்டுச் செல்லும். பயங்கரமாக இருக்கும் என்று நீங்க அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ஆரோக்யம் சும்மா சாதாரண மருந்துக்கே பயந்துகிட்டுப் புற முதுகு காட்டி ஓடிடும்.

மிதுனம்

உங்கள் கோபதாபங்கள் காரணமாய்க்  குடும்பத்தினருடன் சிறு பிரச்சினைகள் ஏற்படாதபடி கவனமாய் இருக்கணுங்க. எடுத்தேன் கவிழ்த்தேன்னு குடும்பத்தினரையும் உறவினர்களை யும் தூக்கி ஃபுட்பால்  ஆடக்கூடாது. சரியா? சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் உங்கள் பெருந்தன்மையும் நல்ல செய்கைகளும் எல்லா மனத்தாபங்களையும் சரிக்கட்டிவிடும்.  முரட்டுத்தனம் ஈகோ போன்ற வேண்டாத விஷயங்கள் உங்களைப் பிடித்தாட்ட வாய்ப்பு உள்ளது. சற்று பணிவும் மென்மையும் இருந்தால் நல்லது. இருப்பீங்கப்பா. வியாபாரிகளும், அலுவலகவாசிகளும் பிறரிடம் சற்று விழிப்புடன் பழகுவது நல்லதுங்க. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நன்மை நடக்கும். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களி லும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பிசினஸில் பார்ட்னர்கள் ஒத்துழைப்பார்கள். 

கடகம்

விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். தலை சம்பந்தமான உபாதை கள் ஏற்படும். பொருளாதாரப் பிரச்னை உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். கடுமையும் கடுகடுப்பும் இருந்தாலும் நல்ல கிரகங்களின் சேர்க்கை உதவவிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என்பதோடு பேச்சில் மென்மை கூடுவதால் மேற்சொன்ன குணங்கள் சற்று மென்மையாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக் குப் பொறுமை தேவை.  எதுக்குன்னு கேட்கறீங்களா? இதோ வாய்ப்பு உங்களைத் தேடிக் கிட்டு வருது. அதுக்குள்ள அவசரப்பட்டு டென்ஷன் ஆகி அப்செட் ஆறீங்க. அதான் வேணாம் னேன். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். கடுமையாக முயற்சித்தால் அந்த முயற்சி பலிதமாகும். குடும்ப நலம் சீராகும். உழைப்பு வீண்போகாது.

சிம்மம்

உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.  கூடவே உங்க பேச்சுக்கு மதிப்புக்கொடுத்துச் செவிசாய்க்க ஆரம்பிப்பாங்க.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றி யாகும். எனினும் குருட்டு அதிஷ்டமெல்லாம் இல்லீங்க. கடுமையான உழைப்புக்கு உங்களுக்குக் கிடைக்கும் பரிசு அது. அதிலும் சற்றுத் தாமதமாய்க் கிடைச்சிருக்குங்க. என்ஜாய். ஒன்றுக்கு மேற்பட்ட நன்மைகளை எதிர்பார்க்கலாம். திருமணமாகும். குழந்தைக் காக ஏங்கிக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு அந்தப் பேறு நிச்சயம் கிடைக்கும். ஏற்படுத்திக் கொடுக்கும். நன்மைகளை நாலுபேருக்கு எடுத்துச் சொல்வீங்க. பிரிந்த நண்பர்களை.. பிரிந்த குடும்பங்களை ஒன்று  சேர்க்கப்பாடுபடுவீங்க.  மற்றவர்களுக்கு மருத்துவம் சம்பந்தமான உதவிகள் செய்வதோடு ஆன்மிக வழிகாட்டல் போன்ற உதவிகளும் செய்வதால் மனசில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குட் லக்.

கன்னி

அலுவலகத்திலும் சரி.. பள்ளி .. கல்லூரி போன்ற இடங்களிலும் சரி.. மற்றவர்களுக்கு உங்க மீது மரியாதை  அதிகரிக்கும். ஸ்கேல் வெச்சு அளந்து பேசுங்க. குறிப்பா அலுவலகத்தில் சென்டிமீட்டருக்குமேல் வாயைத் திறக்காதீங்க. அதுவும் சாப்பாடு சாப்பிட மட்டுமே இருக் கட்டுங்க. காதலர்/ காதலி உயர் நிலை அடைவார். காதல் பலித்து உடனே மோதிரம் மாற்றப்போறீங்க. அதாங்க எங்கேஜ்மென்ட் எனப்படும் நிச்சயதார்த்ததைச் சொன்னேன். மம்மிக்கு அலுவலக அரியஸ் எல்லாம் வரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இத்தனை காலமாய் யாருமே வந்து பார்க்காத நிலத்தை/ வீட்டை/ ஃப்ளாட்டை  வாங்குப வர்கள் வந்து பார்த்து உடனே முடித்துவிடுவார்கள். சூப்பர் இல்ல!!

துலாம்

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர சகோதரிகள் வாழ்வில்  பெரிய  அளவில் நன்மைகளும் சூப்பர் திருப்பங்களும் ஏற்படும். பெண்களுக்கு இனிய வாரம் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் சிறப்பாக வேலை செய்வதாலும் பாஸ் போன்றவர்கள் உங்கள் திறமையை கவனித்து விட்டதாலும் வெற்றி அடைவீர்கள். உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்  என்றாலும் அநாயாசமாய்ச் சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. டோன்ட் ஒர்ரி.  சிம்ப்பிள். வருமுன் காப்பது சிறந்தது என்பதை எப்பவும் நினைவில் வெச்சுக்குங்க.

விருச்சிகம்

நண்பர்களுக்கு அதிக அலைச்சல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அது சுபிட்ச மான நல்ல அலைச்சல் என்பதால் எல்லோரும் மன மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பங்குகொள்வார்கள். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டுங்க. பெண்கள் எதிர்பார்த்த தன வரவும் உண்டு. டோன்ட் ஒர்ரி.  கட்டு மானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலை சற்று பெண்டு நிமிர்வதாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அடுத்த அதன் பயனாக பதவி உயரலாம். சம்பளமும் உயரலாம். ஆனால் எல்லாமே சற்று நிதானப்போக்கில்தான் இருக்கும்.  குடும்பத்திலும் அலுவலகத்திலும் எதிர்பாலினத்தினரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை

தனுசு

கணவன் மனைவிக்குள் சமீபத்தில் காணாமல் போயிருந்த ஒற்றுமையும் நட்புணர்வும் திடீர்னு ஓடி வந்து சந்தோஷப்படுத்தும். தந்தையின் உடல் நிலையையும் அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் அப்டி இப்டி அவர் பேசினால் “சரிப்பா… சாரிப்பா” என்ற இரண்டு வார்த்தைகளை வெச்சு சமாளிங்க. மாணவர்களுக்குக் கல்வி முன்னேற்றம் சூப்பரா இருக்குமுங்க.  புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.  வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்களுக்கும் விசா தொடர்பான எதிர்பார்ப்பில் உள்ளவங்களுக்கு வெற்றி கிடைக்கும். வீக் எண்ட் பார்ட்டி வைப்பீங்க. திருமணத்திற்கு நாள் குறிச்சுட்டாங்கதானே?  மஜாதான். பதற்றமும் டென்ஷனும் இல்லாமல் சுபகாரியங்களை எதிர்கொள்ளுங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 14 முதல் டிசம்பர் 17 வரை

மகரம்

அட… பரவாயில்லையே. முன்பைவிட அடக்கி வாசிக்கநீங்களே.. இதனால  உங்க மேல்  மற்றவர்கள்  வைத்திருக்கும் மதிப்பு மேலும் மேலும் கூடும். பழைய பழிகளை எரேசர் வைச்சு அழிச்சுக்கிட்டே வர்றீங்க. குட். குட். சற்று விரக்தியான சிந்தனைகளும் மன ஓட்டங் களும் தலைகாட்ட முயன்றாலும்கூட அதெல்லாம்  முழுமையான ஆன்மிக சிந்தனைகளாக மாறி உங்களுக்கு நன்மைகளையே தருமுங்க. பண வரவு உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடையக்கூடிய நல்ல வாரம் இது.  கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சண்டைகளுக்கு டாட்டா காண்பிப்பீங்க.  காதலில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டுங்க. செலவுகள் சற்று அதிகமாய் இருக்கும். எதிர்பார்த்த நல்ல சுப நிகழ்ச்சிகள் சற்றே தாமதமாகலாம். டோன்ட் ஒர்ரி. இப்போ உடனே அதெல்லாம் நடந்தால்தான் கஷ்டம்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை

கும்பம்

கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு  அடுத்தடுத்து நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது நீங்கள் நம்பியிருந்தவர்கள்  அரசாங்க உத்யோகம் வாங்கித் தருவார்கள்.  வேறு கம்பெனி மாற நினைச்சீங்களே. வெற்றிகரமாய் முடிஞ்சுடுச்சில்ல? எப்பிடி இருக்கு புது அலுவலகம்? ஆபீசும் பதவியும் முன்பைவிட  ரொம்பவும் அழகாய் மதிப்பாய் இருக்கில்ல… சந்தோஷம். பொறுப்புணர்ந்து செயல்படுங்க. அதிக சம்பளம் என்றால் அதிகப்பொறுப்பு அல்லவா? உங்கள் டி.ஷர்ட்டின் ‘டி‘ மேல் கை வைச்சு சொல்லுங்க. மனசாட்சிப்படிதான் நடக்கறீங்களா? நியாயத்தை என்னிக்கும் மறக்காதீங்க. இப்போதைக்கு வெற்றி கிடைச்சாலும் பிற்பாடு திண்டாடுவீங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிக் குரல் கேட்க ஆரம்பிக்கும். கங்கிராட்ஸ்

மீனம்

உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டுங்க. ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு அல்லது ஊதிய உயர்வு ஏற்படலாம் மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் புதிய நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தால் அங்கு இருந்து தகவல்கள் கிடைக்கும் வெளிநாட்டில் உள்ளவங்களுக்குத் தாய் நாட்டிலிந்து நல்ல நியூஸ்லாம் வர வாய்ப்பு உள்ளது. நிறைய ஜாலி டூர் போவீங்க. முன்பு பல காரணங்களுக்காக உங்களிடமிருந்து விலகியிருந்த நண்பர்களும் உறவினர்களும் நட்புக் கரத்தை நீட்டியவாறு நெருங்கி வருவாங்க. புதிய வீட்டுக்கு அஸ்திவாரம் போடுவீங்க. பணத்துக்காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். வெற்றிகரமான அலைச்சல்தான். அதன் பலன் சுபம்தான். வீட்டைக்கட்டிட்பபார்னு சும்மாவா சொன்னாங்க? எதிரிங்கன்னு நீங்க நினைச்சுக்கிட்டிருந்தவங்க உதவி செய்து அசத்துவாங்க. குட். குட்