பெர்த்:
நடுவானில் ஏர்ஏசியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறில் மாற்றங்கள் நடந்தது. இதனால் தீவிரவாதிகள் தாக்குதல் இருக்குமோ? என்று அச்சமடைந்த பயணிகளின் வற்புறுத்ததால் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் விமானநிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் இந்தோனேசியாவில் உள்ள பாலி நகருக்கு இன்று காலை புறப்பட்டது. வானத்தில் பறக்க ஆரம்பித்த 25வது நிமிடத்தில் விமான பைலட் அறையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 32 ஆயிரம் அடி உயரத்தில் பற ந்து கொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக 10 ஆயிரம் அடி உயரத்தில் இறங்கி பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதற்காக பயணிகள் அனைவரும் பெல்ட் அணிந்து உஷார் நிலையில் உட்காருமாரு விமான சிப்பந்திகள் கேட்டுக் கொண்டனர். இதனால் பயணிகள் பீதியடைந்தனர். அப்போது திடீரென விமானத்தின் உள்ளே மேல்புறத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் அவசர கால ஆக்ஸ்சிஜன் சுவாச மாஸ்க்கள் அனைத்து பயணிகள் முன்பு விழுந்து தொங்கியது. அதோடு எச்சரிக்கை அலாரமும் ஒலித்தது. இதனால் பயணிகள் மிகவும் அச்சத்துடன் மாஸ்க்களை பொறுத்திக் கொண்டனர். அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
விமான ஒலிபெருக்கிகள் நடந்த விவாதங்கள் அனைத்தும் பல மொழிகளில் இருந்ததால் பயணிகள் குழப்பமடைந்தனர். இதனால் தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவிட்டார்களோ? என பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அழுது புலம்பினர். பின்னர் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று தெரிந்ததும் பயணிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
எனினும் பல பயணிகள் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்வதை விரும்பவில்லை. அதனால் அனைவரும் பைலட்களை நிர்பந்தம் செய்ததன் பேரில் விமானம் மீண்டும் பெர்த்தில் தரையிரக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி சென்றனர்.
இதற்கிடையில் பயணிகள் மாஸ்க் அணிந்த வீடியோ காட்சிகள் ஆன்லைனில் பரவியது. அதோடு பயணிகள் தங்களது செல்போன்களில் இருந்து குடும்பத்தினருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினர். இதனால் பயணிகளின் உறவினர்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அவர்களும் பதற்றத்துடன் விமானநிலையத்திற்கு படையெடுத்து வந்து அழுது புலம்பினர். உறவினர்கள் பத்திரமாக திரும்பியதை கண்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
இச்சம்பவத்துக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது. பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பாதுகாப்புக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்து கொள்ளப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் பல விமானங்கள் மீண்டும் தரையிறக்கப்ப டும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூலையில் கோல்டு கோஸ்டில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு சென்ற ஏர் ஏசியா விமானம் பறவை மோதியதால் மீண்டும் தரையிறங்கியது.
கடந்த செப்டம்பரில் சிட்னியில் இருந்து தல்லாஸ் புறப்பட்டு சென்ற கந்தாஸ் விமான இறக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதே வாரத்தில் ஜோகன்ஸ்பர்க் புறப்பட்டு சென்ற பவுண்ட் விமானத்தின் காற்று திரையில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சிட்னியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.