இந்திய வான்வெளியில் விமானத்தில் Wi-Fi பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
விமானத்தில் பயணம் செய்யும் போது இன்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் தான் Wi-Fi செயல்படவில்லை என்று இதுவரை நினைத்திருந்தவர்கள் மத்தியில் மத்திய அரசின் கட்டுபாடு தான் இதற்கு காரணம் என்பது தற்போது புரியவந்துள்ளது.
விமான மற்றும் கப்பல் பயணத்தில் மின்னனு இணைப்பு குறித்த Flight and Maritime Connectivity Actல் இதற்கான மாறுதலை மத்திய அரசு செய்துள்ளது.
ஏற்கனவே 3000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது 3000 அடிக்கு குறைவாக பறக்கும் விமானங்களில் மின்னனு சாதனங்கள் பயன்படுத்த வசதியிருந்தால் அந்த விமானங்களில் Wi-Fi பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் மொபைல், லேப்டாப், ஐ-பேட் உள்ளிட்ட சாதனங்களை 3000 அடிக்கு கீழ் பறக்கும் போதே பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.