டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘இரட்டை சூரிய உதயத்தை’ பார்க்க முடியும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் நாளை (மார்ச் 29 ஆம் தேதி) நிகழப் போகிறது. பகுதி சூரிய கிரகணமாக நிகழ உள்ள இந்த கிரகணம், சுமார் 100 வருடங்களுக்கு பின் நிகழும் அரிய சூரிய கிரகணமாகும். இந்த சூரிய கிரகணமாகும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்ப்பது கடினம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கிரகணத்தின்போது, அரிய நிகழ்வாக ‘இரட்டை சூரிய உதயத்தை’ ஒருசில பகுதிகளில் காண முடியும் என ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர். அதாவது, Space.com மற்றும் LiveScience.com கூற்றின்படி, சனிக்கிழமை சூரிய கிரகண நிகழ்வைப் பார்க்கும் சிலர் “இரட்டை சூரிய உதயத்தைக் காண்பார்கள்”, அதாவது சந்திரன் உதயமாகும் சூரியனை இரண்டு கொம்புகள் இருப்பது போல் தோன்றும். இந்த நிகழ்வு மைனேயின் சில பகுதிகளிலும், கனடாவின் சில பகுதிகளிலும், குறிப்பாக நியூ பிரன்சுவிக் மாகாணம் மற்றும் கியூபெக்கில் சில பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாதுகாப்புக்காக போதுமான கண்ணாடி அணியுமாறு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நடப்பாண்டான, 2025 ஆம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதில் முதல் சூரிய கிரகணம் வரும் மார்ச் 29 ஆம் தேதி நிகழ உள்ளது. இது பகுதி சூரிய கிரகணமாகும. மேலும் இந்த கிரகணம் ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியப்படும். இந்நிலையில், சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது, எந்த நேரத்தில் நிகழவுள்ளது, இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா என்பது குறித்த தகவலை பார்ப்போம்.
சூரிய கிரகணத்தை பொறுத்தவரையில், சூரியன் மறைந்து காணப்படுவதால், இது, சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கோள்கள் சுற்றிவரும் போது, சூரியனின் ஒளி பூமியின் மீது படாதவாறு, நடுவில் சந்திரன் வந்து மறைத்துக் கொள்ளும். இதனால் சூரிய கதிர்கள் பூமியின் மீது சில மணி நேரங்கள் படாமல் இருக்கும். பொதுவாக, கிரகணம் என்றாலே, அது, மறைக்கும் என்றும், இருள் என்றும் கூறப்படுகிறது. அதாவது கிரகணம் நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும்
சூரிய கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனை கோள்கள் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியைச் சுற்றிக் கொண்டே, சூரியனையும் சுற்றி வருகிறது. இவ்வாறு, சூரியன் , பூமி மற்றும் நிலா ஆகிய மூன்றும் சுற்றி வருகையில் , இருப்பிடத்திற்கு ஏற்ப வகையில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
நளை நிகழ உள்ள இநத சூரிய கிரகணமானது, இந்திய நேரப்படி மதியம் சரியாக 2.20 மணி முதல் மாலை 6. 13 மணிவரை நீடிக்கும். மேலும் மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும்.
மேலும் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் நாளை பகுதி நேர சூரிய கிரகணம் நடைபெறும் நிகழ்வை காண முடியும் என தெரிவித்துள்ளனர். மேலும், ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து சூரிய கிரகணம் தெரியும். மேலும், வட அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது நிகழும் என்பதால், சிறந்த பார்வை அனுபவத்தை பெறலாம்.
அதாவது, பகுதி சூரிய கிரகணம் அமெரிக்காவில் சனிக்கிழமை அதிகாலை, EDT அதிகாலை 4:50 மணியளவில் தெரியும், காலை 8:43 மணிக்கு முன்பு முடிவடையும் என்று நேரம் மற்றும் தேதி வலைத்தளம் தெரிவித்துள்ளது. கிரகணம் அமெரிக்காவில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு நேரங்களில் தெரியும் மற்றும் உச்சத்தில் இருக்கும்.