நாளை தேர்தல் நடைப்பெறவிருக்கும் நிலையில், அது குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 26,7446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 7 மணியோடு தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. இதையடுத்து நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டரில், “நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல… ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல…
ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்.— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 5, 2021