மும்பை: இந்நாள் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு, முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் அறிவுரை பகர்ந்திருக்கிறார்.

தற்போது 22 வயதாகும் ரிஷப் பண்ட், இந்திய அணியில் தோனிக்குப் பிறகான விக்கெட் கீப்பராக முன்னிறுத்தப்படுகிறார்.

ஆனால், இவரது ஆட்டத்திறன் திருப்திகரமாக இருப்பதில்லை. பேட்டிங்கில் தொடர்ந்து சோபிக்கத் தவறுவதோடு, கீப்பிங்கிலும் தடுமாறுகிறார்.

இதனால், இவர் அணியில் தனது வாய்ப்பை இழப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளதாவது, “இந்திய அணிக்காக விளையாடுவது எளிதான காரியமல்ல. பல நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்.

ஆட்டத்திறன் பாதிக்கப்படுகையில் பல விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாமல், நமது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றுள்ளார் அவர்.