டில்லி: பாராளுமன்ற மழைக்காலக்  கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந் தேதி தொடங்கும் என பாராளு மன்ற செயலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வழக்கமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதியில்தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, ஏற்கனவே நடைபெற வேண்டிய கூட்டத் தொடர் முடங்கிய நிலையில், 6 மாதங்களுக்குள் மீண்டும், கூட்டம் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

parliament_thumb

அதையடுத்து, பாராளுமன்ற தொடர் தொடங்குவதற்கான  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பாராளுமன்ற  செயலர் இதனை வெளியிட்டார்.

கொரோனா காரணமாக, பாராளுமன்ற அவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அனைவரும் விவாதத்தை கண்டுகொள்ளும் வகையில், சபைக்குள்ளே, திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வரும் 14ந்தேதி கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர்  14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை கூட்டத் தொடர்  நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதுடன்,

மக்களவை கூட்டத் தொடர் காலை 9 மணிக்கும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.