டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, குஜராத்தில் 4 வேட்பாளர்களும், உ.பி. மாநிலத்தில் 11 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அதுபோல அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணிகளை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அரசுக்கு மரணஅடி கொடுக்கும் வகையில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு, தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.. அவருக்கு துணையாக அவரது சகோதரி பிரியங்காவும் களத்தில் குதித்துள்ளார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளர் பொறுப்பு வகிக்கும் முகுல்வாஷ்னிக் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த வேட்பாளர் பட்டியலில் உ.பி. மாநிலத்தில் 11 தொகுதி களுக்கும், குஜராத் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளன.

01. ரே பரேலி (உ.பி.,) – சோனியா

02. அமேதி(உ.பி.,) – ராகுல்

03. உன்னாவோ(உ.பி.,) -அனுடாண்டன்
04. பரூக்காபாத்(உ.பி.,) -சல்மான் குர்ஷித்

05. அகபர்பூர்(உ.பி.,) – ராஜாராம் பால்
06. ஜலாவுன்(உ.பி.,)- பிரிஜ் லால் கர்பி
07. பைசாபாத்(உ.பி.,) – நிர்மல் காத்ரி
08. குஷிநகர்(உ.பி.,) – ஆர்பிஎன் சிங்
09. ஷஹரான்பூர்(உ.பி.,) – இம்ரான் மசூத்
10. பதூன்(உ.பி.,) – சலீம் இக்பால் ஷெர்வானி
11. ஷவுரஹ்ரா(உ.பி.,) -ஜிதின்பிரசாத்
12. ஆமதாபாத் மேற்கு (குஜராத்) – ராஜூபார்மர்
13. ஆனந்த்(குஜராத்)- பாரத் சிங் எம்.சோலங்கி
14. வதோதரா(குஜராத்) – பிரசாந்த் படேல்

15. சோட்டா உதய்ப்பூர்(குஜராத்)- ரஞ்சித் மோகன்சிங் ரத்வா