டெல்லி: நடப்பு ஆண்டுக்கான (2021)  பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால், பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கொரோனா தொற்று, விவசாயிகள் போராட்டம் காரணமாக, டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், நடப்பாண்டில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு  ஆலோசனை நடத்தியல், அதில் எடுக்கப்பட்ட முடிவின்  ஜனவரி 29-ந் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

இந்த ஆண்டின் (2021) முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசுத் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. பின்னர், பிப்ரவரி 1-ந் தேதி (திங்கட்கிழமை) மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  முற்பகல் 11 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜனவரி  29ந்தேதி முதல் பிப்ரவரி 15ந்தேதி  வரை முதல் கட்டமாகவும் மார்ச் 8ந்தேதி முதல் ஏப்ரல் 8ந்தேதி  வரை 3வது  கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.