டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை   மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா,  2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களவையில் க அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு எழுப்பியதால்,  அதையடுத்து,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையில்  இன்று (ஏப்ரல் 2, 2025) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜு இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்போது,  “வக்ஃப் வாரியத்தின் விதிகள் எந்த மசூதி, கோயில் அல்லது மத தளத்தின் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது வெறுமனே சொத்து மேலாண்மை தொடர்பான விஷயம். இருப்பினும், வக்ஃப் சொத்துக்கள் வக்ஃப் வாரியம் மற்றும் முத்தவல்லியால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அடிப்படை வேறுபாட்டை யாராவது புரிந்து கொள்ளத் தவறினாலோ அல்லது வேண்டுமென்றே செய்யாமல் இருந்தாலோ, அதற்கு என்னிடம் எந்த தீர்வும் இல்லை…” என்றார்.

தொடர்ந்து, பேசிய கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது,  ஆட்சியாளர்கள் செய்தது குறித்து கேள்வி எழுப்பியவர்,  ‘2012-2013 இல் செய்யப்பட்ட பணிகள் குறித்து விவரித்தார். , தேர்தல்கள் நெருங்கி வந்தன, மேலும் மாதிரி நடத்தை விதிகள் விதிக்கப்படவிருந்தன என்பதை கூறியவர்,  தேர்தல்கள் ஏப்ரல்-மே 2014 இல் நடந்தன. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு (ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்),   மார்ச் 5, 2014 அன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்த 123 பிரதான சொத்துக்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு மாற்றியது.

அதற்கு என்ன அவசர  தேவை? தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருந்தன. அதுவரை  நீங்கள் காத்திருந்திருக்க முடியாதா? இது தேர்தலில் வெற்றி பெற உதவும் என்று நீங்கள் நினைத்தீர்கள், ஆனால் நீங்கள் எப்படியும் தேர்தலில் தோற்றீர்கள், அதனால் என்ன லாபம்? இதுபோன்ற செயல்கள் வாக்குகளைப் பெறாது”  என்று விமர்சித்தார்.

 “இந்த மசோதாவில் சில முரண்பாடுகள் இருந்தன, எனவே அதைத் திருத்துவது அவசியம்.” எந்தவொரு இந்தியரும் வக்ஃப்பை உருவாக்க முடியும் என்று நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன், ஆனால் 1995 இல் அப்படி இல்லை. 2013 இல், நீங்கள்  சில மாற்றங்களைச் செய்தீர்கள், இப்போது 1995 ஆம் ஆண்டின் விதியை நாங்கள் மீண்டும் கொண்டு வந்துள்ளோம், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றிய ஒருவர் மட்டுமே வக்ஃப்பை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம் என்றார்.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார்.

இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.