டில்லி,
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்  நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 16-ந்தேதி கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
parliment
மேலும் இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 16-ந்தேதி வரை ஒரு மாத காலம் பாராளுமன்ற தொடரை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவது தொடர்பான துணை மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
2017-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை ஜனவரி மாத இறுதியில் தாக்கல் செய்ய ஏதுவாக கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நவம்பர் 3 அல்லது 4-வது வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த முறை நவம்பர் மாதம் 16-ம் தேதி கூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.